/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் வழியாக ரயிலில் தொடரும் கஞ்சா கடத்தல்: புரலியா எக்ஸ்பிரசை பயன்படுத்தும் கடத்தல் கும்பல்

ADDED : ஏப் 01, 2025 05:20 AM
திண்டுக்கல்: மேற்கு வங்காளத்திலிருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி வரும் புரலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்காளத்திலிருந்து வாரத்திற்கு ஒரு முறை திருநெல்வேலி செல்லும் புரலியா எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வழியாக செல்கிறது. இந்த ரயிலில் தமிழக தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே போலீசார் திண்டுக்கல் வரும்போது அதிகாலை என்று கூட பாராமல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாராவாரம் தென் மாவட்ட கஞ்சா, குட்கா, வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மேற்கு வங்காளம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கஞ்சா, குட்கா, மது பாட்டில்களை கடத்தி வருவது தெரிந்தது. அதன்படி புரளியா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். 50 கிலோ குட்கா கடத்தியதாக 2 பேர், வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். புரலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் முன்பதிவில்லாத பெட்டிகளில் மட்மன்றி அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.