/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பேச முடியலையா... காது கேட்கலையா இருக்கவே இருக்குது 'காக்ளியர் இம்ளான்ட்' சிகிச்சை
/
பேச முடியலையா... காது கேட்கலையா இருக்கவே இருக்குது 'காக்ளியர் இம்ளான்ட்' சிகிச்சை
பேச முடியலையா... காது கேட்கலையா இருக்கவே இருக்குது 'காக்ளியர் இம்ளான்ட்' சிகிச்சை
பேச முடியலையா... காது கேட்கலையா இருக்கவே இருக்குது 'காக்ளியர் இம்ளான்ட்' சிகிச்சை
ADDED : மார் 05, 2024 05:38 AM

திண்டுக்கல் : ''திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில்'காக்ளியர் இம்ளான்ட்' அறுவை சிகிச்சை மூலம் 10 குழந்தைகளுக்கு கேட்கும்,பேசும் திறன்கிடைத்துள்ளதாக'' திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத்தலைவர் யோகானந்த் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: பிறக்கும் போதே சில குழந்தைகளுக்கு காது கேளாமை, வாய் பேச முடியாமல் போன்ற குறைபாடுகள் உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காக்ளியர் இம்ளான்ட் அறுவை சிகிச்சையை டாக்டர் செந்தில்குமார்,ஜோதீஸ்வரன், சுபாஷினி, முருகன் குழுவினரால் செய்யப்படுகிறது.
அந்த வகையில் 2022-2024 வரை 10 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய தற்போது கேட்கும்,பேசும் திறனை பெற்றுள்ளனர்.
தனியாரில் இந்த சிகிச்சை பெற ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவாகிறது. அரசு மருத்துவமனையில் ஒரு பைசா கூட செலவில்லாமல் இலவசமாக செய்கிறோம். அறுவை சிகிச்சை மட்டுமின்றி சிகிச்சை பெற்ற குழந்தைகளை வாரம் 2 முறை கேட்கும் திறன் பயிற்சி,பேசும் பயிற்சிக்கு அழைப்போம்.
106 முறை பயிற்சி கொடுத்து எங்கள் கண்காணிப்பில் வைத்திருப்போம். 1 வயது முதல் 6 வயதிலான குழந்தைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
குழந்தைகள் பிறக்கும் போதே இதுபோன்ற குறைபாடுகளுடன் பிறந்தால் அதுபற்றி கவலை பட வேண்டாம். அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ளளலாம் என்றார்.

