/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து
/
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து
ADDED : அக் 03, 2025 01:14 AM

கோபால்பட்டி; கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் கட்டுப்பாட்டை இழந்த கார் பெண்கள், டூ வீலர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
நத்தத்திலிருந்து- திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று நேற்று மதியம் கோபால்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரோட்டோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள்கள், தள்ளுவண்டி கடைகள் மீது வரிசையாக மோதி விபத்தில் சிக்கியது.
இதில் 5 பெண்கள் காயமடைந்தனர். 10 க்கும் மேற்பட்ட டூ வீலர்கள் கீழே விழுந்து நொருங்கியது. கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணமான கார் டிரைவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.