ADDED : செப் 09, 2025 12:18 AM

கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோட்டில் கார் தீ பற்றி எரிந்தது. இதில் பயணித்தவர்கள் தப்பி ஓடினர்.
கொடைக்கானலுக்கு நேற்று காலை 11:00 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட பதிவு எண் கொண்ட காரில் சிலர் வந்தனர். குருசரடி அருகே வந்த போது காரில் புகை வந்தது. காரில் வந்தவர்கள் சுதாரித்து இறங்கிய நிலையில் சிறிது நேரத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.காரில் வந்தவர்கள் மாயமாகினர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
வனத்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் நோக்கில் காரை நகர்த்தினர். கார் எரிந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிக்கவில்லை. வந்தவர்கள் யார், எதற்காக வந்தனர், கார் எப்படி தீப்பற்றிது என்ற விவரம் தெரியாத நிலையில் போலீசார், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் விசாரிக்கின்றனர். நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த காரால் இந்த ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.