ADDED : மார் 18, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் சரவணன் 58.
இவர் தனது உறவினர்களான யுவராஜ், தியாகராஜ் ஆகியோருடன் தனது காரில் திருநெல்வேலிக்கு சென்று மீண்டும் நாமக்கல் நோக்கி சென்றார்.
காரை சரவணன் ஒட்டினார். வேடசந்துார் விட்டல்நாயக்கன்பட்டியை கடந்து வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நான்கு வழி சாலையில் சென்டர் மீடியனில் மோதி ஒரு புறமாக கவிழ்ந்தது. இதில் யுவராஜ், தியாகராஜன் காயமடைந்தனர்.
வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.

