/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடியில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஏலக்காய் விவசாயம் புத்துயிர்

ADDED : நவ 23, 2024 02:29 AM

தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏலக்காய் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது.
இப்பகுதியில் துவக்கத்தில் ஏராளமான ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடந்தது. நாளடைவில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் இந்த விவசாயம் அழிவை சந்தித்தது. விவசாயிகள் வாழ்வாதாரமாக விளங்கிய ஏலக்காய் விவசாயத்தை மீட்டெடுக்க விவசாயிகள் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியும் இருந்தது.
தற்போது புதிய ரகங்களின் வரவு மலைப்பகுதியில் நன்கு விவசாயம் காண உதவுகிறது. இதைதொடர்ந்து நல்லாணி, மலபார் உள்ளிட்ட ரகங்கள் நடவு செய்யப்படுகிறது.
தாண்டிக்குடி, கே.சி.பட்டி, ஆடலுார், பன்றிமலை, பாச்சலுார், தடியன் குடிசை, பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் செய்யப்படுகிறது.
ஆனால் ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க தயக்கம் காட்டுகிறது.
இதன் பரப்பை அதிகரிக்க நறுமணப் பொருள் வாரியம் மானியம், புதிய ரக நாற்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.