/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிப்.24, 25ல் கேரம் சாம்பியன்ஷிப்
/
பிப்.24, 25ல் கேரம் சாம்பியன்ஷிப்
ADDED : பிப் 23, 2024 05:57 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் பிரஸித்தி வித்யோதயா பள்ளி இணைந்து நடத்தும் 9 ம் ஆண்டு சின்னாபிள்ளை -ராஜாமணியம்மள் நினைவு கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப். 24,25ல் திண்டுக்கல் - கரூர் ரோட்டில் உள்ள பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடக்கிறது.
12,14 , 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவில் நடக்கிறது. முதல் 4 பரிசுகள் ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும்.
போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டைகர், மதிய உணவு , பள்ளிச் சீருடையுடன் வர வேண்டும். பிப்., 24 ல்மாணவர்களுக்கும், 25ல் மாணவியர்களுக்கும் போட்டிகள் நடக்கிறது.
அணி பதிவை dindigulcarrom@gmail.com ல் அனுப்பலாம். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 எண்களை அணுகலாம்.
அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்க செயலர் ஆல்வின் செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் செய்கின்றனர்.