/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு
/
மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு
ADDED : அக் 18, 2025 04:23 AM
நிலக்கோட்டை: வத்தலகுண்டு வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அக்.14ல் நடத்திய சோதனையில் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்த நிலையில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வத்தலகுண்டு வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் சோதனை நடந்தது. அலுவலகம் எதிரே உள்ள தனியார் வாகன புகை பரிசோதனை மையத்தில் சோதனை நடத்தியதில் புரோக்கர்களான நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டியை சேர்ந்த அஜய் ஜான்சன் 25, வத்தலக்குண்டு அருகே உச்சப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் 34, ஆகியோரிடம் இருந்த ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 220 ஐ பறிமுதல் செய்தனர். அங்கிருந்த அரசு ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளரான மதுரையை சேர்ந்த இளங்கோ, சிலுக்குவார்பட்டியை சேர்ந்த அஜய் ஜான்சன், உச்சப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.