ADDED : அக் 18, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்., சார்பில் வாக்கு திருட்டு தடுப்பு , இந்திய அரசியல் அமைப்பை காப்போம் என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு ஒட்டன்சத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அகில இந்திய பொதுச் செயலாளர் சூரஜ் ஹெக்டே தலைமை வகித்தார். தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் ராம் மோகன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு, தேனி மாவட்ட தலைவர் முருகேசன் கலந்து கொண்டனர். நகராட்சி கவுன்சிலர் முகமது மீரான் நன்றி கூறினார்.