/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
/
அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : ஜூலை 22, 2025 04:12 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர் மனைவி கலாராணி. இவருக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ளது.
இதில் வீடு கட்டுவதற்காக பூஜை செய்தபோது திண்டுக்கல் மாநகராட்சி 34 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பாஸ்கரன், அவரின் ஆதரவாளர்கள் இளங்கோ, சதீஷ், பெரியசாமி, மாரிக்கண்ணன் தகராறு செய்து வேலியை அடித்து நொறுக்கினர். கலாராணி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். ஆவணங்களின்படி நிலம் கலாராணிக்கே சொந்தமானது. தகராறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் தாலுகா போலீசார் கவுன்சிலர் பாஸ்கரன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

