/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ள மது மீது கை வைத்த த.தே.க.,வினர் மீது வழக்கு
/
கள்ள மது மீது கை வைத்த த.தே.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஜூலை 19, 2025 02:53 AM
வடமதுரை: செங்குறிச்சி குரும்பபட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி தமிழர் தேசம் கட்சியினரும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்திய நேரத்திலும் , அருகில் உள்ள பால் கடையில் தி.மு.க., நிர்வாகி திருட்டு மது விற்று கொண்டிருந்தார்.
இதையறிந்த ஆர்ப்பாட்ட குழுவினர் அக்கடையை சூறையாடி மதுபானங்களை ரோட்டில் கொட்டி அழித்தனர். மது விற்ற வல்லம்பட்டி தி.மு.க., நிர்வாகி அலெக்ஸ்பாண்டியனை 41, வடமதுரை போலீசார் கைது செய்தனர். அவர் கைதான நிலையில் பால் கடையை சூறையாடியதாக த.தே.க., நிர்வாகிகள் பூமிநாதன், ஆண்டி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட 35 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.