/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காங்., அலுவலகத்தை இடித்த இருவர் மீது வழக்கு
/
காங்., அலுவலகத்தை இடித்த இருவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 19, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் கடைவீதியில் காங்., பெயரில் பட்டாவாகியிருந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்., நிர்வாகியாக இருந்த முருகன் ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையுடன் அலுவலகம் அமைத்தார்.
அவர் கட்சி மாறிய நிலையில் கட்டுமான செலவு தந்தால் தான் இடத்தை ஒப்படைப்பேன் எனக்கூறி பூட்டி வைத்திருந்தார். அப்பகுதியை அய்யலுார் ஜீவா, 29. கதிரேசன் 34 ஆகியோர் இரவு நேரத்தில் இடித்து தள்ளினர். இருவர் மீதும் காங்., வட்டாரத் தலைவர் ராஜரத்தினம் புகாரில் வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.