/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நவம்பரில் காவிரி குடிநீர் : அமைச்சர் சக்கரபாணி
/
நவம்பரில் காவிரி குடிநீர் : அமைச்சர் சக்கரபாணி
ADDED : செப் 28, 2025 03:26 AM
ஒட்டன்சத்திரம்: வரும் நவம்பரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் நடந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள், பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது தி.மு.க., ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் ரூ.930 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.
நவம்பரில் இத்திட்டத்தைமுதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார் என்றார். தொகுதி பொறுப்பாளர் பரணி மணி, மாவட்ட அவைத் தலைவர் மோகன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகர அவை தலைவர் சோமசுந்தரம், செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், கவுன்சிலர்கள் சாந்தி தேவி ,கனகராஜ், சண்முகப்பிரியா, அழகேஸ்வரி கலந்து கொண்டனர்.