/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மார்ச்சுக்குள் காவிரி குடிநீர் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி
/
மார்ச்சுக்குள் காவிரி குடிநீர் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி
மார்ச்சுக்குள் காவிரி குடிநீர் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி
மார்ச்சுக்குள் காவிரி குடிநீர் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி
ADDED : நவ 14, 2024 07:11 AM

ஒட்டன்சத்திரம்; ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் காவிரி குடிநீர் திட்டம் வரும் மார்ச்க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் '' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் நிறைவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர் பேசியதாவது:
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனுார் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
மார்ச்சுக்குள் இந்த பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இத் திட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது.
எதிர்கால குடிநீர் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற 42 மாதத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 6852 பணிகள் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
திட்ட இயக்குனர் திலகவதி, கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, பொது விநியோகத் திட்ட கூட்டுறவு துணை பதிவாளர் அன்புக்கரசன், தாசில்தார் பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்ரிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வடிவேல் முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், கவுன்சிலர் சண்முகம், ஊராட்சி தலைவர்கள் செல்லம்மாள், அமுதா, பூரணம், சுப்பிரமணி, தங்கராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் கவுரி, குழந்தைவேல் கலந்து கொண்டனர்.

