/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடிக்கடி உடையும் காவிரி குடிநீர் குழாய்; தார் ரோடால் விபரீதம்
/
அடிக்கடி உடையும் காவிரி குடிநீர் குழாய்; தார் ரோடால் விபரீதம்
அடிக்கடி உடையும் காவிரி குடிநீர் குழாய்; தார் ரோடால் விபரீதம்
அடிக்கடி உடையும் காவிரி குடிநீர் குழாய்; தார் ரோடால் விபரீதம்
ADDED : ஜன 21, 2025 06:22 AM

குஜிலியம்பாறை: கரூரில் இருந்து வேடசந்துார் நகர் பகுதிக்கு வரும் காவிரி குடிநீர் குழாய் வழித்தடத்தின் மீது ரோடு அகலப்படுத்தியதால் காவிரி குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.
தற்போது உடைப்பு ஏற்பட்டு பத்து நாட்களை கடந்தும் சரி செய்யாததால் வேடசந்துார் நகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர்.
கரூர் காவிரி ஆற்றில் உள்ள கட்டளையிலிருந்து வேடசந்துார் நகர் பகுதிக்கு ராட்சத குழாய்கள் வழியாக காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
திண்டுக்கல் கரூர் மெயின் ரோடு தொட்டனம் பட்டியிலிருந்து டி. கூடலுார் வரை உள்ள இருவழிச் சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. இந்த ரோடு காவிரி குழாயின் மீதே அமைக்கப்பட்டது.
அப்போதே காவிரி குடிநீர் குழாய்க்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்புகள் கிளம்பின. இருந்தும் ரோடு அமைக்கும் பணி முடிந்து விட்டது.
இந்நிலையில் கனரக வாகனங்களின் போக்குவரத்தால் காவிரி குடிநீர் குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுவது தொடர்கிறது.
தற்போது உடைப்பு ஏற்பட்டு பத்து நாட்களை கடந்தும் உடைப்பு ஏற்பட்ட குழாய் பாதையை சரி செய்யும் பணிகள் தொடர்வதால் காவிரி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதால் குழாய் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நிரந்தர தீ ர்வா க அமையும்
ப.திருமுருகன், தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர், புளியம்பட்டி: குழாய் பாதையின் மீது புதிதாக தார் ரோடு அமைக்கும் போதே குழாய் பாதை பதிக்கப்படும் என்ற கருத்து நிலவியது.
தற்போது அது நுாறு சதவீதம் உறுதியாகிவிட்டது. காரணம் இந்த வழித்தடத்தில் டோல்கேட் எதுவும் இல்லாத நிலையில் கனரக வாகனங்களில் போக்குவரத்து கூடுதலாக உள்ளது.
இதனால் காவிரி குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. கோவிலுாரில் இருந்து டி.கூடலுார் வரை 10க்கு மேற்பட்ட இடங்களில் உடைப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குழாய் பாதையை மாற்றி அமைத்தால் தான் நிரந்தர தீர்வாக அமையும்.
ஆர்.கணேசன், விவசாயி கே. ஆனைபட்டி: காவிரி குடிநீர் குழாயின் மீது புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டது. அப்போதிருந்தே, அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் காவிரி குடிநீர் இன்றி பதிக்கின்றனர். இது மட்டுமின்றி வாகனங்கள் செல்லும்போதும் இதன் பாரம் தாங்காமல் காவிரி குழாயில் திடீரென உடைப்பு ஏற்படும்போது பெரும் விபத்து அபாயம் வாய்ப்புள்ளது. வேடசந்துார் தாலுகா பகுதி மக்களின் நலன் கருதி காவிரி குடிநீர் குழாய் பாதையை மாற்றியமைக்க வேண்டும்.