/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு இரு நாட்களுக்கு விநியோகம் கட்
/
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு இரு நாட்களுக்கு விநியோகம் கட்
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு இரு நாட்களுக்கு விநியோகம் கட்
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு இரு நாட்களுக்கு விநியோகம் கட்
ADDED : மார் 19, 2026 05:04 AM

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வேடசந்துார், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கரூர் காவிரி ஆற்றில் கட்டளை பகுதியில் இரு கிணறுகள் அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் கரூர் ஜெகதாபி, பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார் வழியாக வேடசந்துார், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.
நேற்று மதியம் 1:20 மணிக்கு கோவிலுார் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் தண்ணீர் பீறிட்டு ரோட்டில் ஆறாக ஓடியது.
இதையடுத்து வேடசந்துார், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (மார்ச்19, 20) இரு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என காவிரி குடிநீர் திட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.