sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம்

/

காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம்

காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம்

காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம்


ADDED : ஜூன் 25, 2025 01:10 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம், ஆத்துார் ஒன்றியங்களில் காவிரி குடிநீர் பைப் லைன் சேதத்தை சீரமைப்பதில் குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம் காட்டி வருகிறது.

பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதுடன் பாதுகாப்பற்ற சூழலால் தொற்று பரவல் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.

2006ல் கரூர் மாவட்டம் புதுப்பாளையம் மாயனுார் பகுதிகளில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கான தண்ணீர் தேவையை நிறைவேற்ற காவிரி கூட்டு குடிநீர் திட்ட ஏற்பாடுகள் துவங்கின.

நத்தம், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனுார் பேரூராட்சிகள் வரை உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள், இவற்றில் உள்ள ஆயிரத்து 276 குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க 363 கோடி ரூபாயில் திட்டம் செயல்பாட்டை துவங்கியது.

காவிரி ஆற்றில் ராட்சத நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு தினமும் 4810 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற திட்டமிடப்பட்டது. 100க்கு மேற்பட்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டன.

பேரூராட்சி, ஊராட்சி பாகுபாடின்றி லிட்டருக்கு ரூ 4.50 கட்டணமாக குடிநீர் வடிகால் வாரியம் வசூலித்தது. படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ. 11.50 என்ற அளவை கடந்து உயர்ந்து வருகிறது.மாதந்தோறும் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து இதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் பெரும்பாலான இடங்களில் குழாய் கட்டமைப்பு பணிகளில் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற புகார் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அடிக்கடி குழாய் உடைப்பு அதிக தண்ணீர் வீணாக வெளியேறுவது போன்ற புகார்கள் தற்போது வரை தொடர்கிறது. 17 ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டத்தில் தண்ணீர் வீணாவதை தடுத்து முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பதில் பின்னடைவு நீடிக்கிறது. பல இடங்களில் வீணாக வெளியேறும் தண்ணீர் விளைநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி ரோட்டோர, குடியிருப்பு பகுதிகளில் குழிகளில் தண்ணீர் குட்டைகளை உருவாக்கி விபத்து அபாயங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் துரித நடவடிக்கை எடுப்பதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பணம் வீணாவதை தடுப்பதுடன் தண்ணீர் தட்டுப்பாட்டை நவிர்க்க ஏதுவாக இருக்கும்.

நிதி வீணடிப்பு


ஆர்.தயாளன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் : மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. ஒவ்வொரு நீர்த்தேக்க தொட்டிகளும் அளவீட்டு கருவிகள் பொருத்தப்பட்டு இதற்கான கட்டண விகிதம் கணக்கீடு செய்யப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இப்பணியில் அதிகாரிகள் அலட்சியத்தால் பெருமளவு தண்ணீர் வீணாகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பணம் விரயமாகி வருகிறது. இப்பிரச்னையால் விளைநிலங்களிலும் குடியிருப்புகளிலும் பாதிப்பு மட்டுமே அதிகரித்து வருகிறது.

அதிகாரிகள் அலட்சியம்


க.உமாமகேஸ்வரி, பா.ஜ., மாவட்ட துணை தலைவர் : இத்திட்டத்திற்கான குழாய்களில் போதிய தரமின்மையால் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. மெயின் ரோட்டில் இருந்து சில அடி துாரத்தில் குழாய் பதித்துள்ளனர்.

சில இடங்களில் சரிவர குழி மூடப்படாமல் மண் மேவி உள்ளனர் .வாகன சக்கரங்கள் சிக்கி விபத்துக்குள்ளாவது மட்டுமின்றி வினியோக பணியும் தடைபடுகிறது.

தற்போது வரை பல இடங்களில் அதிக தண்ணீர் வீணாக வெளியேறுவது தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இப்பிரச்னையை கண்டு கொள்வதில்லை. சீரமைப்பு பணியில் நிலவும் அலட்சியத்தால் அதிக தண்ணீர் வீணாகிறது. பெரும்பாலான இடங்களில் காவிரி திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்த போதும் முழுமையான வினியோக செயல்பாடு தற்போதுவரை துவங்காத நிலையே உள்ளது.

சுகாதாரக்கேடு அபாயம்


ராமச்சந்திரன், பா.ஜ., விவசாய அணி ஒன்றிய நிர்வாகி, ரெட்டியார்சத்திரம் : உள்ளாட்சி அமைப்புகள் விலை கொடுத்து வாங்கும் காவிரி குடிநீர் வினியாக குளறுபடியால் சாக்கடையில் செல்லும் அவலம் பல கிராமங்களில் தொடர்கிறது. காவிரி தண்ணீர் நிர்ணயித்த நேரத்தில் வழங்குவதில் ஊழியர்கள் மெத்தனம் காட்டுகின்றனர். குளறுபடிகளால் தண்ணீர் வினியோக வாய்ப்பு இருந்த போதும் பல கிராமங்களில் செயற்கையாக தட்டுப்பாடு உருவாகும் அவல நிலை நீடிக்கிறது. குழாய் உடைப்புகளை சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம், விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. தர்மத்துப்பட்டி, ஆலத்தூரான்பட்டி, டி.புதுப்பட்டி, கோபிநாதசுவாமி கோயில் விலக்கு உள்ளிட்ட இடங்களில் உடைப்புகள் அருகே தேங்கும் தண்ணீர், குட்டையாக மாறியுள்ளது. இப்பிரச்னையால் வினியோகிக்கப்படும் தண்ணீரின் சுகாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us