/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க ஊர்வலம் ..
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க ஊர்வலம் ..
ADDED : ஜன 10, 2025 07:31 AM
திண்டுக்கல்: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்திலிருந்து வணிக வரித் துறை அலுவலகம் வரை நடைபெற்ற இதற்கு இயக்க மாநில நிதி காப்பாளர் ஜான் லியோ சகாயராஜ் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர்கள் ரவிசந்திரன், ஆக்னஸ், புனிதன் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் ப தொடங்கி வைத்தார். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேடேரிக் எங்கல்ஸ் பேசினார். தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் விஜய், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர்பார்த்தசாரதி கலந்து கொண்டார்.