/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சி.பி.எஸ்., இயக்கம் உண்ணாவிரதம்
/
சி.பி.எஸ்., இயக்கம் உண்ணாவிரதம்
ADDED : அக் 27, 2024 04:32 AM

திண்டுக்கல் : தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் நடந்த
இதற்கு சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வணிக வரி பணியாளர் சங்க மாநிலச் செயலர் திரவியராஜா, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் தொடங்கி வைத்தார். ஜாக்டோ ஜியோ முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பேசினர்.தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் ப.விஜய், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பி.கேந்திரமூர்த்தி கலந்து கொண்டனர்.