ADDED : அக் 17, 2025 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேஷ் மாநிலங்களை போன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், புனிதன், ஆரோக்கியராஜ், பாலாஜிகேசவன், சுரேஷ்சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். நிதிக்காப்பாளர் ஜான்லியோ சகாயராஜ் பேசினார். தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 க்கு மேற்பட்டோர் கைதாகினர்.