/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர் வீணாகாமல் தடுக்க சிமென்ட் வாய்க்கால் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
/
நீர் வீணாகாமல் தடுக்க சிமென்ட் வாய்க்கால் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
நீர் வீணாகாமல் தடுக்க சிமென்ட் வாய்க்கால் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
நீர் வீணாகாமல் தடுக்க சிமென்ட் வாய்க்கால் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
ADDED : பிப் 17, 2024 05:46 AM

ரெட்டியார்சத்திரம்: '' ஆத்துார் தொகுதியில் அனைத்து நீராதாரங்களுக்கும் மழை நீர் வீணாகாமல் வந்தடையும் வகையில் சிமென்ட் வாய்க்கால் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சில்வார்பட்டி ஊராட்சி புதிய கட்டட திறப்பு, அப்பனம்பட்டியில் பல்நோக்கு மைய கட்டடத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது: 1989 முதல் இன்று வரை 34 ஆண்டுகளாக சில்வார்பட்டி கிராமம் எனக்கு ஆதரவாளித்து வருகிறது. குளங்களை துார் வாருதல், கண்மாய்களுக்கான நீர்வரத்து பாதைகளை சீரமைத்தல் தொடர்பான இப்பகுதியினரின் மனுக்கள் வரப்பெற்றுள்ளன. தொகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் மழை நீர் வீணாகாமல் வந்தடையும் வகையில் சிமென்ட் வாய்க்கால் அமைத்துக் கொடுக்கப்படும். இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சரிடம் கோரிக்கை அளித்துள்ளேன். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்.
அப்பனம்பட்டி பகுதியினரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டி கொடுக்கப்படுவதோடு காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். வேலுச்சாமி எம்.பி., ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்யமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, நடராஜன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் தனலட்சுமி ராமமூர்த்தி வரவேற்றார். பி.டி.ஓ., க்கள் கிருஷ்ணன், மலரவன், தி.மு.க., நிர்வாகி அம்பாத்துறை ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் காளீஸ்வரி, மலைச்சாமி, நாகலட்சுமி, திருப்பதி, சுமதி பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.