/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வளர்ச்சிப் பணிகளுக்கு சிமென்ட் ஆலை உதவி
/
வளர்ச்சிப் பணிகளுக்கு சிமென்ட் ஆலை உதவி
ADDED : ஏப் 04, 2025 05:20 AM
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியம் சி.சி., குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் பாளையம் பேரூராட்சி குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் லிட்டர் புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்க ரூ.11.70 லட்சம் , பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை அமைக்க ரூ.6.70 லட்சம் என 23.40 லட்சம் காசோலையை சிமென்ட் ஆலைத் தலைவர் கிருஷ்ணன் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமிடம் வழங்கினார்.
குஜிலியம்பாறை ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சி சி.சி., குவாரி சில்லுக்கவுண்டன் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை பி. டி. ஒ., மதியழகனிடம் ஆலைத் தலைவர் கிருஷ்ணன் வழங்கினார். துணை பொது மேலாளர் ஜெயபிரகாஷ் காந்த் உடன் இருந்தார்.

