/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மத்திய கூட்டுறவு புதிய வங்கி கிளை திறப்பு
/
மத்திய கூட்டுறவு புதிய வங்கி கிளை திறப்பு
ADDED : செப் 06, 2025 03:59 AM

ஒட்டன்சத்திரம்: சத்திரப்பட்டியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.ஒரு லட்சம் வீதம் 20 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கடன் தொகைக்கான காசோலைகள், மகளிர் சுய உதவி குழு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். ஆர்.டி.ஓ., கண்ணன், முதன்மை வருவாய் அலுவலர் கவுரிமீனா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, தாசில்தார் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ் பிரபு பாண்டியன், பொது மேலாளர் பாலசுப்பிரமணி, உதவி மேலாளர்கள் சுகுமார், கண்மணி, லோகநாதன், கிளை மேலாளர் நாராயணன், ஒன்றிய செயலாளர் தர்மராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாரதா சிவராஜ் கலந்து கொண்டனர்.