/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏ.ஆர்.டெய்ரி நிறுவன ஆய்வு முடிவு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்

ADDED : செப் 23, 2024 02:31 AM
திண்டுக்கல்: திருப்பதி லட்டு விவகாரத்தில் நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.,டெய்ரி நிறுவனத்தில் நடந்த ஆய்வில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுப்பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு திண்டுக்கல் ஏ.ஆர்., டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் விலங்குகள் கொழுப்பு இருந்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்நிறுவனத்தில் 2 நாட்களுக்கு முன்பு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய உணவுப்பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சார்பில் ஆய்வு நடந்தது.
ஆணையத்தின் தென்மண்டல அதிகாரி ரவின் முருகேசன் காலை 9:00 முதல் இரவு 11:30 மணி வரை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தார்.
இது குறித்து மத்திய உணவுப்பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏ.ஆர்., டெய்ரி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெய் தயாரிப்பில் ஒவ்வொரு நிலையாக பகுப்பாய்வு செய்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து ஆவணங்கள், தரச்சான்றுகள் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன.
பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. எல்லா பொருட்களையும் தவிர்க்காமல் பகுப்பாய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளோம். இவை உணவுப் பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். மாதிரிகளின் முடிவுகள் வெளிவந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.