/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கர்ப்பப்பை புற்று நோய் எச்.பி.வி., தடுப்பூசி
/
கர்ப்பப்பை புற்று நோய் எச்.பி.வி., தடுப்பூசி
ADDED : மார் 29, 2025 05:51 AM
திண்டுக்கல்: கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கு எதிரான 3ம் கட்ட எச்.பி.வி., தடுப்பூசியை இலவசமாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கு எதிரான எச்.பி.வி., தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகின்றனர். அனைவருக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டது. குயின் சிட்டி சங்கத் தலைவர் கவிதா செந்தில்குமார், செயலர் பார்கவி சந்தோஷ், செர்வி க்யூர் திட்ட சேர்மன் டாக்டர் பாலசுந்தரி, 2025- --26ம் ஆண்டிற்கான குயின்சிட்டி தலைவர் ராஜாத்தி, அசிஸ்டன்ட் கவர்னர் செல்வக்கனி, காவேரி மருத்துவ குழும சி.எஸ்.ஆர்., டிபார்ட்மென்ட் பொறுப்பாளர் டாக்டர் மனோஜ் , குயின் சிட்டி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.