ADDED : ஏப் 24, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் நடந்து சென்ற பெண்ணிடம் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் ஐந்து பவுன் தங்க செயினை பறித்துச்சென்றனர்.
வேடசந்துார் கோகுல் நகர் மேற்கு தெருவில் வசிக்கும் அரசு போக்குவரத்து கழக டிரைவர் முருகேசன் 45. இவரது மனைவி கோமதி 40. நேற்று காலை வேடசந்துார் நகர் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் சென்று விட்டு 9:50 மணிக்கு வீடுநோக்கி நடந்து சென்றார். வீட்டருகே வந்த போது டூவீலரில் பின்னால் வந்த ஹெல்மெட் அணிந்திருந்த இரு நபர்கள் கோமதி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் விசாரிக்கிறார்.