தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' டி.எப்.ஓ., விற்கு காத்திருக்கும் சவால்கள்

 'கொடை' டி.எப்.ஓ., விற்கு காத்திருக்கும் சவால்கள்

 'கொடை' டி.எப்.ஓ., விற்கு காத்திருக்கும் சவால்கள்


ADDED : பிப் 04, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பொறுப்பேற்றுள்ள புதிய டி.எப்.ஓ., முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

கொடைக்கானல் டி.எப். ஓ., வாக இருந்த யோகேஷ் குமார் மீனா சர்ச்சைகளுக்கு இடையே சென்னை வண்டலுாருக்கு மாற்றப்பட்டார். புதிய டி.எப். ஓ., வாக அரவிந்த் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு அந்நிய மரங்கள் அகற்றுதலில் வனத்துறை உடந்தையுடன் மரங்கள் கடத்தப்பட்ட பிரச்னை, இங்கு பணியாற்றும் வனத்துறையினர் இணக்கமில்லாத சூழலில் கருத்து வேறுபாடுகள் நிலவுவது, கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றித் திரியும் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல், விவசாய நிலங்களில் புகும் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதம், மனித வனவிலங்குகள் மோதல் போக்கு உள்ளது.

பெரும்பகுதியான நீர்த்தேக்கங்கள் வனப்பகுதியில் உள்ள நிலையில் அவற்றை பராமரிப்பதில் சிக்கல்,அந்நிய மரங்கள் அகற்றும் திட்டத்தில் முறைகேடுகளின்றி பலன் தரும் மரங்கள்,சோலை மரக்கன்றுகளை நடவு செய்து வனப்பகுதியை புத்துயிராக்குவது, வனவிலங்குகளுக்கு தேவையான புல்வெளிகளை உருவாக்குதல், வனப்பகுதியில் குவிந்துள்ள குப்பையை அகற்றி இயற்கை சுற்றுச்சூழலை உருவாக்குவது, வனச் சுற்றுலா தலங்களில் முறைகேடுகளை களைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது, வனத்துறையில் உள்ள குறைபாடுகளை மாதம்தோறும் பணியாளர்கள் கருத்துகளை அறிந்து சீர் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவ்வாறான பிரச்னைகளில் தன்னை முன்னிலைப்படுத்தி கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தை சீராக்க புதிய டி. எ.ப். ஓ., அரவிந்த் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே இவர் முன் காத்திருக்கும் சவால்களாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us