ADDED : ஜூன் 17, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: நெல்லை ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதனால் ஜூலை 3 வரை ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி கோவை - -நாகர்கோவில் இடையே இரு மார்க்கத்திலும் பகலில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திண்டுக்கல் - -கோவை இடையே மட்டும் இயக்கப்படும்.
திருச்சி - -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து காலை 7:15 மணிக்கு பதிலாக 8:35 மணிக்கு புறப்படும். இதனால் அந்த ரயில் திண்டுக்கல்லுக்கு 9:40 மணிக்கு வந்து சேரும்.
தாம்பரம் - -நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஜூன் 21 முதல் 30 வரை திண்டுக்கல்- - தாம்பரம் இடையே இயக்கப்படும்.
