ADDED : ஜூன் 17, 2026 05:14 AM
சாணார்பட்டி: சாணார்பட்டி வட்ட தோட்டக்கலை அலுவலகத்தில் 'கேத் பச்சாவோ அபியான்' என்ற விவசாய நிலத்தை பாதுகாப்போம் இயக்கம் பயிற்சி முகாம் நடந்தது.
உதவி தோட்டக்கலை இயக்குநர் சண்முக சுந்தரம் வரவேற்றார். பயிர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தராஜ் மையத்தின் நோக்கம், பணிகள், விளைநில பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார்.
பயிர் பாதுகாப்பு அலுவலர் அமுதா பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், தேசிய பூச்சிநோய் அமைப்பு செயலி, மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், பயிர் பாதுகாப்பு குறித்து பேசினார்.
உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஸ்வரி, நிசிந்தா ஆகியோர் உயிரியல் நோய் கட்டுப்பாட்டு காரணிகளை கொண்டு விதை நேர்த்தி செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். விவசாயிகளுக்கு விதைநேர்த்திக்கான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் வழங்கப்பட்டது.
