ரோல்பால் ஸ்கேட்டிங் அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
ரோல்பால் ஸ்கேட்டிங் அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
ADDED : ஜூன் 17, 2026 05:13 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ரோல்பால் ஸ்கேட்டிங் அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு முகாம் சின்னாளப்பட்டி ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் நடந்தது. 9, 11, 14, 17 மற்றும் 17 வயதிற்கு மேற்பட்ட பிரிவுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் தனித்தனியாக தேர்வுக்கான போட்டிகள் நடந்தன.
அனைத்து வயது பிரிவுகளிலும் வீரர், வீராங்கனைகள் தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 18-க்கும் மேற்பட்ட அணிகள் அமைக்கப் பட்டன.
தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பயிற்சி பெற்று மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அணிகள் உருவாக்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட ரோல்பால் சங்கத்தலைவர் ராபின் ராஜ்காந்த் பங்கேற்றார். ஏற்பாடுகளை தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் மாநில துணைத்தலைவர் பிரேம்நாத் செய்தார்.
பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு கேடயம் வழங்கப்பட்டன.
