ADDED : ஜூலை 23, 2025 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : வக்கம்பட்டியில் புனித மரிய மதலேனாள் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் ஆடம்பர, சிறப்பு, திருவிழா திருப்பலிகள், கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
மின் அலங்கார ரத ஊர்வலமும் நடந்தது. நேற்று சப்பர ஊர்வலத்தில் 3 ரதங்களில் புனிதர்கள் வீற்றிருக்க ஊர்வலம் நடந்தது.
வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.