/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பக்தர்களை நோகடிக்கும் அறநிலையத்துறை
/
பக்தர்களை நோகடிக்கும் அறநிலையத்துறை
ADDED : ஜன 12, 2024 06:39 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மலையடிவார ஆஞ்சநேயர் கோயிலில் பார்க்கிங் தொடங்கி பொரி வாங்குவது வரை பக்தர்களிடம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திண்டுக்கல் மலைக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் பார்க்கிங் முதல் விளக்கு தீபம் , பொறி விற்பனை தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அதனை செயல்படுத்துவோர் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மலையடிவாரம் என்பதால் போதிய பார்க்கிங் வசதி கிடையாது. இதனால், சில பக்தர்கள் ரோட்டில் வாகனத்தை நிறுத்திச் செல்வதுண்டு.
இருப்பினும் இதற்கும் கட்டணம் என வசூலிக்கப்படுகிறது. இதே போல் கோயில் கடைகளில் விற்கப்படும் விளக்குகள் பொறி கூட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
முறையான விலைப்பட்டியல் இங்கு இல்லை. நேற்று அனுமன் ஜெயந்தி என்பதால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி அதிக தொகையை வசூலித்தனர்.
இதனை துறை அதிகாரிகள்,கோயில் நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும். விலைப்பட்டியல் உள்பட அனைத்துமே வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும். வசதிகள் குறைவாக இருப்பின் அதனை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும். இனியும் இதுபோன்று நடக்காதவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

