sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வஞ்சிக்கும் வனத்துறை :பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகள்: இழப்பீடு வழங்குவதில் தொடரும் தாமதம்

/

வஞ்சிக்கும் வனத்துறை :பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகள்: இழப்பீடு வழங்குவதில் தொடரும் தாமதம்

வஞ்சிக்கும் வனத்துறை :பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகள்: இழப்பீடு வழங்குவதில் தொடரும் தாமதம்

வஞ்சிக்கும் வனத்துறை :பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகள்: இழப்பீடு வழங்குவதில் தொடரும் தாமதம்


ADDED : அக் 01, 2024 05:34 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வனப்பகுதிகளுக்கு அருகே இருக்கும் விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது. சேதமான பயிர்களுக்கான இழப்பீடுகளை வனத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்குவதிலும் காலதாமதம் செய்கிறது. மாவட்ட நிர்வாகம்தான் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் பழநி, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை,கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியின் அருகே உள்ளது. மலையடிவாரங்களில் அதிகளவில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். வனப்பகுதிகளுக்குள் வாழும் யானை,கரடி,காட்டுமாடு உள்ளிட்டவைகளுக்கு அங்கு போதியளவு உணவுகள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டால் அருகிலிருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கிருக்கும் விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. இதை தடுக்க செல்லும் மக்களையும் வனவிலங்குகள் தாக்குகிறது. சில நேரங்களில் உயிரே பறிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் எங்கேயாவது புகார்கள் வரும் போது வனவிலங்குகளை விரட்டுவதற்கு வருகின்றனர். மற்ற நேரங்களில் மவுனமாக இருக்கின்றனர். நிரந்தரமாக வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகாமல் தடுப்பதற்குரிய எந்த நடவடிக்கையும் இதுவரை வனத்துறை நிர்வாகம் எடுக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் மனுக்கள் வாயிலாக கலெக்டர் அலுவலகம்,வனத்துறை அலுவலகங்களில் கொடுத்தும் இன்னும் விடிவு பிறக்கவில்லை. விவசாயிகள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபடும் போது அவற்றை வனவிலங்குகள் எளிதில் சேதப்படுத்துகின்றன . சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தும் இழப்பீடு தொகையை பல மாதங்களாக இழுத்தடித்து அதன்பிறகு வழங்கப்படுகிறது. அதை பெறுவதற்குள் சம்பந்தபட்ட விவசாயி பாடாய்படுகிறார்கள். நீண்ட காலமாக தொடரும் இப்பிரச்னை மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இழப்பீடுகளை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

........

பெரும் பிரச்னை

மாவட்டத்தில் அதிகளவில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தான் உள்ளது. அதுவும் மலையடிவாரங்களில் தான் நடக்கிறது. வனவிலங்குகள் அதிகளவில் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி வனப்பகுதிகளுக்குள் பார்வையிட்டு வனவிலங்குகளுக்கு தேவையானவைகளை பூர்த்தி செய்தால் தான் அவைகள் விவசாய நிலங்களுக்குள் புகாமல் தடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல் வனவிலங்குகள் சேதப்படுத்தும் விவசாய பயிர்களுக்குரிய இழப்பீடுகளை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும். சிறுமலை பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் குதிரைகள் காட்டுமாடுகள் தாக்கி பலியாகிறது. இதுகுறித்து வனத்துறையை அணுகினால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

லோகநாதன்,முன்னாள் ஊராட்சி உறுப்பினர்,சிறுமலை.






      Dinamalar
      Follow us