/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சென்னை ஐ.டி., ஊழியர் கால்வாயில் மூழ்கி பலி
/
சென்னை ஐ.டி., ஊழியர் கால்வாயில் மூழ்கி பலி
ADDED : ஜூலை 26, 2025 08:38 PM

வத்தலக்குண்டு:பாசன கால்வாயில் மூழ்கி, சென்னை ஐ.டி., ஊழியர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், விராலிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ், 33; ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
விராலிப் பட்டி கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழாவிற்கு நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார்.
நேற்று காலை அருகில் உள்ள வைகை பெரியாறு சிமென்ட் பாசன கால்வாயில் அனைவரும் குளிக்க சென்றனர்.
அப்போது, சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருவேங்கடம், 34, கால்வாய் படியில் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார்.
இதில், அவர் அடித்து செல்லப்பட்டார். 10 கி.மீ., கடந்து இவரது உடல் கரை ஒதுங்கியது. நிலக்கோட்டை தீயணைப்பு துறையினர் உடலை கைப்பற்றினர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.