/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்கள்; பயணிகள் மகிழ்ச்சி
/
'கொடை' யில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்கள்; பயணிகள் மகிழ்ச்சி
'கொடை' யில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்கள்; பயணிகள் மகிழ்ச்சி
'கொடை' யில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்கள்; பயணிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 27, 2025 03:20 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் நகர் முழுவதும் பூத்துள்ள வைல்ட் செர்ரி பூக்களை பயணிகள் ரசித்தனர்.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கும் பயணிகள் அழகுற பூத்துள்ள மலர்களையும் ரசிக்க தவறுவதில்லை.ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் கொடைக்கானல் நகர் பகுதி முழுமையும் பரவலாக உள்ள செர்ரி மரங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கள் பூப்பது வழக்கம். தொடர்ந்து இம்மாதம் முழுமையும் பூத்துக் குலுங்கி பின் இளந்தளிர்கள் துளிர்விடும்.நகர் பகுதி முழுமையும் அழகூற பூத்துள்ள மலர்களை பயணிகள் ரசித்து புகைப்படங்களை எடுத்து மகிழ்கின்றனர்.