/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்
/
முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்
ADDED : ஆக 27, 2025 12:45 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது.
போட்டிகளில் பங்கேற்க 25,177 பள்ளி மாணவர்கள், 26,852 மாணவிகள், 2542 கல்லுாரி மாணவர்கள், 2605 மாணவிகள், 334 மாற்றுத்திறனாளி ஆண்கள், 193 பெண்கள்,பொதுமக்கள் தரப்பில் 1336 ஆண்கள், 309 பெண்கள், அரசு அலுவலர்களில் 1768 ஆண்கள், 1684 பெண்கள் என 62,800 பேர் இணையவழியில் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி நேற்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதை கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். நேற்று பள்ளி மாணவர்களுக்கான தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபாடி , கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் 1600 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட விளைாட்டு இளைஞர் நலன் அலுவலர் சிவா , மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சவுடமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.