ADDED : செப் 26, 2026 04:59 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் பிரிவு என நடந்து வருகிறது.
நேற்று கல்லுாரி மாணவர் பிரிவு ஹாக்கி போட்டி நடந்தது. நான்கு அணிகள் பங்கேற்றன.
ஜி.டி.என்., கல்லுாரி ஏ அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. ஜி.டி.என்., கல்லுாரி பி அணி 2ம் இடமும், காந்திகிராம பல்கலை அணி மூன்றாம் இடமும் பெற்றன.
பொதுப்பிரிவு பெண்கள் கால்பந்து போட்டியில் 4 அணிகள் பங்கேற்றன.
திண்டுக்கல் பெண்கள் பி அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் பெண்கள் ஏ அணி இரண்டாம் இடமும், லயோலா பெண்கள் கால்பந்து அணி மூன்றாமிடமும் பெற்றன. ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா செய்திருந்தார்.
