தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : செப் 26, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர்.

திண்டுக்கல் மாநகரின் முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அலுவலர்களுக்கு கமிஷனர் பிரேம்ஆனந்த் உத்தரவிட்டார்.

அதன்படி மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் சாந்தி, உதவி பொறியாளர்கள் சரண், கார்த்திக், திவ்யபிரசன்னா, சுகாதார ஆய்வாளர் சபரிநாதன் உள்ளிட்டோர் நேற்று நகரின் முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நகர் டி.எஸ்.பி., கார்த்திக் மேற்பார்வையில் தெற்கு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடு பட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக ரோடு, மெயின் ரோடு, கச்சேரி தெரு, ரதவீதிகள் ஆகியவற்றில் ரோட்டின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர்.

கடைகளின் கூரைகளில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள், முன்பகுதியில் கூடுதலாக ஆக்கிரமித்து சிமென்ட் சிலாப்புகளால் அமைக்கப்பட்ட நடைபாதை ஆகியவற்றை மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

அதேநேரம் ஆக்கிரமிப்பு கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், உபகரணங்கள், மேஜை உள்ளிட்டவற்றை மாநகராட்சி அலுவலர்கள் கைப்பற்றி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். அலுவலர்கள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் கடைகளை அமைக்கக் கூடாது. அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us