ADDED : செப் 26, 2026 04:56 AM

வேடசந்துார்: வேடசந்துார் அருகே ரங்கமலை கணவாய் பகுதியில் ரோட்டின் ஓரம் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.
திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி ரங்கமலை கணவாய் பகுதி மாவட்ட எல்லையாக உள்ளது.
இங்கு காலை நேரத்தில் ரோட்டின் ஓரம் லாரிகளை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்து செல்கின்றனர். அந்த லாரிகளில் இருந்து முட்டைக் கழிவுகள், வீணான தையல் துணிகள், வாழைச் சருகுகள், மருத்துவக் கழிவுகள் என குவியல் குவியலாக கொட்டிச் செல்வது தொடர்கிறது.
இதுகுறித்து புகார்கள் எழுந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு வழங்கப்படாததால் கேமரா பயனற்று காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் ரங்கமலை கணவாய் பகுதியில் கழிவுப் பொருட்களை லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வது நீடிக்கிறது.இதனை தடுக்க சி.சி.டி.வி., கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், கழிவுகளை கொட்டும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் நெடுஞ்சாலைத் துறையினர், கூம்பூர் போலீசார் முன்வர வேண்டும்.
