/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் கைவியாபாரிகளாக வடமாநில குழந்தை தொழிலாளர்கள்
/
பழநியில் கைவியாபாரிகளாக வடமாநில குழந்தை தொழிலாளர்கள்
பழநியில் கைவியாபாரிகளாக வடமாநில குழந்தை தொழிலாளர்கள்
பழநியில் கைவியாபாரிகளாக வடமாநில குழந்தை தொழிலாளர்கள்
ADDED : ஜன 09, 2025 05:34 AM
திண்டுக்கல்: பழநியில் ஐயப்பன் , தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகரித்து வரும் நிலையில் கைவியாபாரிகளாக வடமாநில குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு கார்த்திகை துவங்கி வைகாசி மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் வருகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என 7 மாதங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விழாக்காலங்களில் மட்டுமின்றி வாரவிடுமுறை நாட்கள் என ஏனைய நாட்களிலும் பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் பழநி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவுபடி பழநி கிரிவீதியில் கடைகள் அகற்றப்பட்டுள்ளதால் கைவியாபாரிகள் மட்டுமே ஆங்காங்கே வலம் வந்து பக்தர்களிடம் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கொட்டு, பொம்மை துப்பாக்கி, பொம்மைகள், பெல்ட், விளையாட்டு பொருட்கள் உட்பட பலவற்றையும் கைககளில் ஏந்திக்கொண்டு கிரிவீதி மட்டுமல்லாது நகர் முழுவதுமே சுற்றி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மில்கள், பஞ்சாலைகள், ஓட்டல்கள் போன்றவற்றில் அதிகளவில் வடமாநிலத்தவர்கள் பணிபுரியும் நிலையில் குழந்தை தொழிலாளர்களையும் கைவியாபாரத்திற்காக அழைத்து வந்துள்ளனர்.