/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தைகள் பாதுகாப்பு கலந்தாய்வு
/
குழந்தைகள் பாதுகாப்பு கலந்தாய்வு
ADDED : அக் 27, 2024 04:22 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூடுதல் மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் தலைமை வகித்தார், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வரவேற்றார். மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், மாஜிஸ்திரேட்டு சவுமியா, நன்னடத்தை அதிகாரி சரவணக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சங்கரநாராயணன் கலந்து கொண்டனர்.பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு அளித்தல், குழந்தைகளுக்கு மனரீதியாக தன்னம்பிக்கை அளித்தல், போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்ததும் உரிய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.