/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தை வேலப்பர் மலைக்கு படி முருக பக்தர்கள் வரவேற்பு
/
குழந்தை வேலப்பர் மலைக்கு படி முருக பக்தர்கள் வரவேற்பு
குழந்தை வேலப்பர் மலைக்கு படி முருக பக்தர்கள் வரவேற்பு
குழந்தை வேலப்பர் மலைக்கு படி முருக பக்தர்கள் வரவேற்பு
ADDED : மார் 27, 2025 05:02 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் மலைக்கு படிப்பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
பழநி முருகன் கோயிலின் உப கோயிலாக ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சுவாமி கோயில் உள்ளது.
800 ஆண்டுகள் பழமையான இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த நிலையில் குழந்தை வடிவத்தில் அருள் புரிகிறார். மலையில் உள்ள கோயிலுக்கு செல்ல பாதை இல்லை. கரடு முரடான செடிகளுக்கு நடுவே சில இடங்களில் கற்களை கொண்டு படி அமைக்கப்பட்டுள்ளது. இவை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மலை மேல் சென்று குழந்தை வேலப்பரை தரிசனம் செய்வது சிரமமாக இருந்து வந்தது.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதி ஆன்மிகவாதிகள், தன்னார்வலர்கள் இணைந்து படிப்பாதையை அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் முடிந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. குழந்தை வேலப்பர் மலையை சுற்றி கிரிவலப் பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.