/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சமாதான புறா வடிவில் அணிவகுத்த சிறார்கள்
/
சமாதான புறா வடிவில் அணிவகுத்த சிறார்கள்
ADDED : நவ 15, 2024 05:47 AM

வத்தலக்குண்டு: அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் நேரு வேடமிட்டு குழந்தைகள் வந்திருந்தனர். பள்ளி நுழைவுவாயிலில் போர் வேண்டாம் உலக அமைதி வேண்டும் என்று வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நேரு வேடமிட்ட குழந்தைகள் சமாதான புறா வடிவில் நின்று உலக அமைதியை வலியுறுத்தினர். பள்ளி முதல்வர் பால்ராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். சகோதரி ரிஜிசா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இலக்கியா நன்றி கூறினார்.
பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் மூன்றாம் பகுதி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா, கலைத் திருவிழா நடந்தது. மெயின் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை வகித்தார். மாற்றுத்திறன் குழந்தைகள் ஆசிரியர் கிறிஸ்தவராஜ், உதவி ஆசிரியர் ஆஷா முன்னிலை வகித்தனர். பொறுப்பு தலைமை ஆசிரியர் ராமு வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவப்பிரார்த்தனா பேசினார். எமிஸ் பணியாளர் சண்முகப்பிரியா, மேலாண்மை குழு தலைவர் வனிதா பங்கேற்றனர்.