நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை கலைமகள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா தாளாளர் ஆர்.கே.பெருமாள் தலைமையில் நடந்தது. இந்திய தபால் துறை சார்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் ராமு, தபால் துறை ஆய்வாளர் விவேக் கலுங்கு பிரசாத் பங்கேற்றனர்.
தங்கம்மாபட்டி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வட்டார வள மைய ஆசிரியர் சுமதி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் அனுராதா வரவேற்றார். ஆசிரியர்கள் அமுதா, விஜயலட்சுமி பங்கேற்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் பேரணி நடந்தது. பயிற்சி கலெக்டர் வினோதினி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

