ADDED : நவ 23, 2025 03:36 AM

திண்டுக்கல்: தமிழக அறிவியல் இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு பி.எஸ்.என்.ஏ., இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளிதரன், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் இளங்கோ பேசினர்.
நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை எனும் கருப்பொருளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான 147 அறிவியல் ஆய்வுகளை 20க்கும் மேற்பட்ட பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சமர்ப்பித்தனர். இன்றைய சூழலிலும் பெண்களின் வாழ்வாதாரமும் நாளும் அறிவியல் அறிவோம், அறிவியலை அறிவோம், அறிவியலால் இணைவோம் தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. மாணவர்களின் ஆய்வுகள் பரிசீலிக்கப்பட்டு 11 குழந்தை விஞ்ஞானிகள் மண்டல அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் இலக்கியக் களத்தலைவர் மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகமணி, உமா, கோகிலாவாணி, மஞ்சுளா கலந்து கொண்டனர்.

