/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடியில் மிளகில் மெதுவாடல் நோய் பாதிப்பு
/
தாண்டிக்குடியில் மிளகில் மெதுவாடல் நோய் பாதிப்பு
தாண்டிக்குடியில் மிளகில் மெதுவாடல் நோய் பாதிப்பு
தாண்டிக்குடியில் மிளகில் மெதுவாடல் நோய் பாதிப்பு
ADDED : பிப் 21, 2026 07:33 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் மெதுவாடல் நோய் பாதிப்பால் மிளகு விவசாயம் பாதித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாத நிலை , வறண்ட வானிலை பனியின் தாக்கத்தால் 2025 ல் கீழ் மலைப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மிளகில் மெதுவாடல் பாதிப்பு ஏற்பட்டு இலைகள் மஞ்சள் நிறமாக மாறின.
தற்போது நடப்பாண்டில் மிளகு விளைச்சலும் வெகுவாக பாதித்துள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றம் என விவசாயிகள் கருதுகின்றனர். தற்போதைய மெதுவாடல் பிரச்னையால் மேலும் மிளகு விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பாலகும்பகன் கூறுகையில், ''சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் பனியின் தாக்கத்தால் மெதுவாடல் பிரச்னை மிளகில் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க விவசாயிகள் மண்ணை ஈரப்ப தமாக பாதுகாக்க வேண்டும்.
வேர்ச்செடிகளின் கீழ் மேங்கோசப் 2 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து துாரில் ஊற்ற வேண்டும். ஈரப்பதம் உள்ள சூழலில் போர்டே கலவை ஒரு சதவீதம் ஒரு லிட்டருக்கு தெளிக்கும் பட்சத்தில் மெதுவாடல் பிரச்னை சரியாகும்'' என்றார்.

