/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூடப்படும் நிலையில் உள்ள சின்னாளபட்டி மினி நெசவு பூங்கா
/
மூடப்படும் நிலையில் உள்ள சின்னாளபட்டி மினி நெசவு பூங்கா
மூடப்படும் நிலையில் உள்ள சின்னாளபட்டி மினி நெசவு பூங்கா
மூடப்படும் நிலையில் உள்ள சின்னாளபட்டி மினி நெசவு பூங்கா
ADDED : நவ 01, 2024 04:11 AM
சின்னாளபட்டி : கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் மினி நெசவு பூங்கா மூடப்படும் நிலையில் உள்ளது.
சின்னாளபட்டியில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசால் சிறிய அளவிலான நெசவு பூங்கா கடந்த ஜூன் 14ல் திறக்கப்பட்டது. இங்கு 35 தறிகளுடன் திறப்பு விழா நடந்தது. அப்போது நெசவு கூலிக்கான தொகையில் ரூ.100 முதல் ரூ.150 வரை பிடித்தம் செய்து கூலியை குறைப்பது, நெசவிற்கான பாவு வழங்குதலில் பாரபட்சம் என பலர் புகார் எழுப்பினர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த குளறுபடிகளை களைய கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் அதிகாரிகள் ஆசியுடன் முறைகேடுகள் நடப்பதாக புகார் தொடர்கிறது. இதுதவிர புதிய நெசவாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்காதது, பதிவு செய்வதை தாமதப்படுத்துவது என நெசவுத்தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் 10 தறிக்கு மேல் கூடுதலாக தறிகள் பூட்டப்படாத சூழலில் மினி பூங்கா செயல்பாட்டில் சிக்கல் நீடிக்கிறது. காவலாளி, துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்வதிலும் பிரச்னை தொடர்கிறது.
நெசவாளர்கள் கூறியதாவது: அமைச்சர் உத்தரவையடுத்து கைத்தறி துறை அதிகாரிகள், நெசவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நெசவு நெய்து முடித்தவுடன் தடையின்றி நுால்கள், பாவு கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், வாழ்வாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். ஆனால் நெசவு பூங்காவின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க தவறினர்.
அவசர கோலத்தில் துவக்கியது மட்டுமின்றி நெசவு பணிகளில் தொடரும் பல குளறுபடிகளால் துவங்கிய 4 மாதங்களிலேயே மூடு விழாவை நோக்கி மினி பூங்கா செயல்பாடு உள்ளது என்றனர்.