/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு சின்னாளபட்டி மாணவி தேர்வு
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு சின்னாளபட்டி மாணவி தேர்வு
தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு சின்னாளபட்டி மாணவி தேர்வு
தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு சின்னாளபட்டி மாணவி தேர்வு
ADDED : செப் 29, 2025 05:33 AM

சின்னாளபட்டி : தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தமிழக அணி சார்பில் சின்னாளபட்டி பள்ளி மாணவி ஹரிஷா தேர்வாகியுள்ளார்.
தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வரும் ஜன. 5 முதல் 9 வரை 5 நாட்கள் நடக்கவுள்ளது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நடந்தது.
இதில் 14 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவியர்(ஓபன் சைட்) பிரிவில், சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி எம்..ஹரிசா தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக அணி சார்பில் இப்போட்டியில் 3 மாணவியர் பங்கேற்கின்றனர். இதில் ஹரிஷா முதல் இடத்தில் தேர்வாகியுள்ளார். தேசிய போட்டியில் பங்கேற்க தேர்வான மாணவிக்கு, மதுரை உடற்கல்வி ஆய்வாளர் வினோத், சேரன் வித்யாலயா பள்ளி முதல்வர் திலகம் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.