/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநில ஹேண்ட்பால் போட்டிக்கு சின்னாளபட்டி மாணவர்கள் தேர்வு
/
மாநில ஹேண்ட்பால் போட்டிக்கு சின்னாளபட்டி மாணவர்கள் தேர்வு
மாநில ஹேண்ட்பால் போட்டிக்கு சின்னாளபட்டி மாணவர்கள் தேர்வு
மாநில ஹேண்ட்பால் போட்டிக்கு சின்னாளபட்டி மாணவர்கள் தேர்வு
ADDED : அக் 24, 2025 02:41 AM
சின்னாளபட்டி: மாவட்ட ஹேண்ட்பால் போட்டிகளில் வென்ற சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள், சின்னாளபட்டியில் அக். 14, 15ல் மாணவியருக்கும், 16, 17, 23ல் மாணவர்களுக்கும் நடந்தது.
இறுதிப் போட்டியில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள், திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை எதிர்கொண்டனர்.
19 வயது பிரிவில் 33க்கு 16, 17 வயது பிரிவில் 29க்கு 9, 14 வயது பிரிவில் 25க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கிலும் சின்னாளபட்டி அணி வென்றது.
இந்த 3 பிரிவுகளிலும் வென்று மாநில போட்டிக்கு சேரன் பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். வென்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா முதல்வர் திலகம் தலைமையில் நடந்தது. மாநில ஹேண்ட்பால் கழக செயலாளர் சிவக்குமார், பரிசு வழங்கினார்.
பள்ளி மேலாளர் பாரதிராஜா, அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆல்பிரட்யங், அபிஷேக் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் அசோக்குமார், செந்தில்குமார், ஆரோக்கிய ரஞ்சனி பங்கேற்றனர்.
சூப்பர் சீனியர் பிரிவுக்கான மாநில போட்டி நவம்பரில் திருவண்ணாமலையிலும், சீனியர் பிரிவிற்கு டிசம்பரில் திருச்சியிலும், ஜூனியர் பிரிவிற்கு ஜனவரியில் ராணிப் பேட்டையிலும் நடக்க உள்ளது.

