
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சின்னாளபட்டி பிருந்தாவன தோப்பு ராம அழகர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக லட்சுமி நாராயணருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக சித்ரா பவுர்ணமியில், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் எதிர்சேவை, அடுத்தடுத்து மோகினி அவதாரம், பூப்பல்லக்கு ஊர்வலம், புட்டுத்திருவிழா நடக்க உள்ளது.
-எரியோடு: காணப்பாடி ஐந்துபந்தி முத்தாம்மாள், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் சார்ந்த அக்கம்மாள், ஆலம்மாள் கோயில் குதுப்பணம்பட்டியில் உள்ளது. இங்கு சித்திரை விழாவிற்காக கோயில் வீட்டில் இருந்து பக்தர்கள் பூக்கூடையுடன் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தொட்டணம்பட்டி, மரவபட்டி, கொல்லப்பட்டி, வேலாயுதம்பாளையம், எருதப்பன்பட்டி, எரியோடு பண்ணைப்பட்டி கிராமங்களை சேர்ந்த கோயில் தலைக்கட்டுதாரர்கள் பங்கேற்றனர்.